மூன்றாவது நாளாக தொடரும் முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு (Photos)
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்ட புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(04.10.2023) மூன்றாவது நாளாக தொடர்கிறது
இந்த புறக்கணிப்பு நடவடிக்கைகள் நேற்று முன்தினம் (02.10.2023) ஆரம்பிக்கப்பட்டது.
நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதற்கமைய முல்லைத்தீவு நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற அதே வேளையில் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறுகின்ற மாங்குளம் நீதிமன்றத்தினுடைய நடவடிக்கைகளுக்கும் சட்டத்தரணிகளின் எவரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



















கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
