நாடாளுமன்ற பெண் ஊழியர்களிடம் மோசமான செயலில் ஈடுபட்ட மூத்த அதிகாரி: எடுக்கப்பட்ட நடவடிக்கை
இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள மூத்த அதிகாரி ஒருவர், அத்துறையில் பணி புரியும் சில பெண் ஊழியர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குசானி ரோஹணதீரவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் ஆரம்ப விசாரணையின் பின்னர் குறித்த அதிகாரியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பல பெண் ஊழியர்கள் இந்தக் குழுவிடம் தமது ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
முறைப்பாட்டை திரும்ப பெற முயற்சி
முன்னதாக உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்பு துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன, பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டைத் திரும்ப பெறுவதற்கு சில அதிகாரிகள் முயற்சித்ததாக குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |