குரங்குகளிடையே வேகமாக பரவும் ஒரு வகை நோய்: வெளியாகியுள்ள தகவல்
பொலன்னறுவை மற்றும் கிரிதலே ஆகிய பிரதேசங்களில் உள்ள குரங்குகளிடையே ஒரு வகை நோய் வேகமாகப் பரவி வருவதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோய் வேகமாகப் பரவும் வாய்ப்பு
சுற்றித்திரியும் அதிகளவான குரங்குகள் மற்றும் பபூன் குரங்குகளின் பெருக்கம் காரணமாக, புனித நகரப் பகுதிகள் உட்பட ஏனைய பகுதிகளிலும் இந்த நோய் வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அபாயம் இருந்தபோதிலும், இந்த நிலைமை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குரங்குகளின் எண்ணிக்கை
பொலன்னறுவை மற்றும் கிரிதலே பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது நீண்டகாலமாக நீடித்து வரும் ஓர் பிரச்சினையாகும். இது இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.
தற்போது, நோய்வாய்ப்பட்ட குரங்குகளை மயக்க மருந்து கொடுத்துப் பிடித்து, அவற்றின் நோய்த் தன்மையைக் கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
