நாடாளுமன்றத்திற்கு வரப்போகும் சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள்
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் வெற்றிடமாகவுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (20.08.2026) நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கைக்கு இணங்க, நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்கள் தெளிவுபடுத்தவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
இது தொடர்பில் சபாநாயகருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் நேற்றைய தினம் (19.08.2026) நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார்.
இதற்கமைய, திட்டமிடப்பட்டவாறு இன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சட்டத்தரணிகள் சங்கத்தினர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து கலந்துரையாடவுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ள விடயம்
இந்தக் கலந்துரையாடலில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியைச் சந்தித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது போன்றே, இம்முறையும் சுமூகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக வருகை தரும் சட்டத்தரணிகளுடன் ஏனைய உறுப்பினர்களையும் இணைந்து கொள்ளச் செய்யுமாறு வலியுறுத்தினார்.
நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan