வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

Government Of Sri Lanka Northern Province of Sri Lanka Money Ramalingam Chandrasekar Nagalingam Vedanayagam
By Kajinthan Mar 18, 2025 12:13 PM GMT
Report

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று  (18) இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு வெளியீடு

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு வெளியீடு

ஆளணி வெற்றிடங்கள் 

மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன எனத் தெரிவித்தார்.

வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல் | Discussion On The Use Of Funds Allocated For North

வடக்கு மாகாணம் கால்நடை உற்பத்தித் துறையில் மிகச் சிறந்த நிலையில் உள்ளபோதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவு எனச் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமான மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது என ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்றும், ஆளணிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்த ஆளுநர் இது தொடர்பில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கந்தளாய் சீனித் தொழிற்சாலை அபிவிருத்தி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கந்தளாய் சீனித் தொழிற்சாலை அபிவிருத்தி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஒதுக்கீடுகள்

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகரன், மாகாணசபைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதைச் செலவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் வருகை தரும் நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை அதிகாரிகள் வழங்கவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல் | Discussion On The Use Of Funds Allocated For North

வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாணத்துக்கான நிதி மூலங்கள் அதற்கான அனுமதிக்கான நடைமுறைகள் தொடர்பில் விரிவாகக் கூறியதுடன் இந்த ஆண்டு மாகாணசபைக்கு 7,328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், தமது அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பாகவும் முன்னெடுக்கப்படவுள்ள வேலைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

இதன் பின்னர் கல்வித்துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் அநேகர் மேன்முறையீடு செய்துள்ளதாக ஆளுநர் மற்றும் அமைச்சரின் கவனத்துக்குகொண்டு வந்தார்.

இதன்போது ஆளுநரும், அமைச்சரும் இரு விடயங்களைச் சுட்டிக்காட்டினர். ஒருபோதும் வெளிமாவட்டங்களில் பணியாற்றாதவர்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்லத்தான் வேண்டும் எனவும், அத்துடன் மேன்முறையீடுகளை ஒவ்வொன்றாக ஆழமாக ஆராயுமாறும் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் அதன் பின்னர் தமது அமைச்சு, திணைக்களங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

மருத்துவமனைகளில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெரியப்படுத்தினர்.

வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சினை குறித்து நடவடிக்கை

வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சினை குறித்து நடவடிக்கை

டிஜிட்டல் மயமாக்கல்

வடக்கு மாகாணத்துக்குரிய சில சிறுபயிர்களுக்கு இலவச காப்புறுதி இன்னமும் இல்லை என்றும் அதைப் பெற்றுக்கொடுத்தால் விவசாயிகள் அதிகளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவர் எனவும் குறிப்பிட்டனர்.

அதேபோன்று உரமானியம் சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கும் வழங்கினால் விவசாயிகள் ஆர்வத்துடன் அதை முன்னெடுக்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல் | Discussion On The Use Of Funds Allocated For North

உள்ளூராட்சி அமைச்சின் செயலர், தமது அமைச்சால் இம்முறை முன்னெடுக்கபடவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

அத்துடன் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின்ப பணிப்பாளர், அரசாங்கம் ஒதுக்கியுள்ள விசேட நிதியில் முன்னெடுக்கப்படவுள்ள வீதிகளின் முன்னுரிமைப்பட்டியலை சமர்ப்பித்தார்.

இறுதியாக மகளிர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் வேலைத் திட்டங்கள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் ஆகியோரும், பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், நிதி, திட்டமிடல், பொறியியல் ஆகியோரும், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பணிப்பகிஷ்கரிப்பில் குதித்த திருகோணமலை நகரசபை ஊழியர்கள்

பணிப்பகிஷ்கரிப்பில் குதித்த திருகோணமலை நகரசபை ஊழியர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

02 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fjellhamar, Norway

01 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கட்டுவன், கொழும்பு

02 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், கோண்டாவில்

01 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Ammerzoden, Netherlands

27 Apr, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், வெள்ளவத்தை

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பருத்தித்துறை

02 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், Mississauga, Canada

01 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கிளிநொச்சி, அரியாலை, Toronto, Canada

26 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, சரசாலை, Toronto, Canada

01 May, 2015
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, La Courneuve, France

25 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US