வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சினை குறித்து நடவடிக்கை
வெற்றிலைக் கேணியில் கரைவலை வாடியால் கடற்றொழிலாளர்களிடையே தொடரும் முறுகல் நிலை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு
இப்பிரச்சினை தொடர்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையில் அடிப்படையில் கவனம் செலுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
அதன் பிரகாரம் இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்கு உரிய தலையீட்டினை மேற்கொண்டு
21ஆம் திகதிக்கு முன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்துக்கு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளருக்கும் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவுறுத்தல் வழங்கி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |