பணிப்பகிஷ்கரிப்பில் குதித்த திருகோணமலை நகரசபை ஊழியர்கள்
திருகோணமலையில் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் போதான வீதி மற்றும் வடிகான் துப்பரவுப் பணிகளின்போது நகரசபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை கண்டித்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கும் நகரசபை ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராரின் போது பொலிஸாரால் நகரசபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
வீதி துப்பரவுப்பணிகளின்போது ஏற்பட்ட தகராறானது அன்றையதினமே சுமூகமான பேச்சுவார்த்தைகளின் மூலமாக தீர்க்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நிமிர்த்தம் நகரசபை ஊழியர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
நகரசபை ஊழியர்கள்
குறித்த விடயத்தினை கண்டிக்கும் முகமாக திருகோணமலை நகரசபை ஊழியர்கள் இன்று காலை முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை நகரசபை செயலாளர் அவர்களிடம் கையளித்த பின்னராக மீண்டும் கடமைக்கு திரும்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |