சமூக மற்றும் கலை இலக்கிய செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்
அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் சமூக மற்றும் கலை இலக்கிய செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள், நிகழ்வுகள் தொடர்பிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (12.07.2025) திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் திருகோணமலை மாநகரசபை முதல்வர் க.செல்வராசா ஆகியோர்களுடன் நடத்தப்பட்டுள்ளது.
ஆலோசனை
திருகோணமலையில் கலை இலக்கிய முன்னெடுப்புகள், மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு நோயல் இம்மானுவேலுடைய ஆலோசனையும் பெறப்பட்டது.
மேலும் மாணவர்களின் வாசிப்பு தொடர்பில் நூலகங்களுடன் இணைந்து "நூல்கொண்டு நிமிர்" செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 19 மணி நேரம் முன்

இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்கள்.. வெளியே கூறமுடியாத இஸ்ரேலின் மிகப் பெரிய இராணுவ இழப்பு News Lankasri
