சஜித் பிரேமதாசவுக்கு எதிரான தடையை நீக்கும் ரணில்
2025 செப்டெம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு அவர்கள் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாட்டில் பங்கேற்கும் சஜித்
இந்த நிலையில் தமது கட்சிக்கு ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பு கிடைத்துள்ளதாகவும், உறுப்பினர்களுடன் சஜித் பிரேமதாச, மாநாட்டில் பங்கேற்பார் என்றும் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டுக்கு, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தடை நீக்கம்
முன்னதாக, கைது, தடுப்புக்காவல் மற்றும் பிணைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், முதல் நடவடிக்கையாக, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சஜித் பிரேமதாச தலைமையில் பிரிந்து சென்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கப் போவதாக தெரியவருகிறது.
அத்துடன் அவர் பொதுவில் அறிக்கை ஒன்றையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 11 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
