மன்னாரில் வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்
வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (31) காலை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட தெங்கு உற்பத்தியாளர்களுக்கான உரமானியம், உதவித்தொகை, பயனாளிகளுக்கான புதிய தென்னங் கன்று என்பன வழங்கி வைக்கப்பட்டது.
தீர்மானங்கள்
அத்துடன் பனை அபிவிருத்தி சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தலைமையில் இடம்பெற்ற குறித்த விசேட கூட்டத்தில்,பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் ,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர்கள்,பிரதேசச் செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உப தவிசாளர்கள், அமைச்சின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டதோடு மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
