மலையக இந்திய வம்சாவளி மக்களுக்குமான காணி உரிமை! ஜீவன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல் (Photos)
எமது மக்களுக்கு வீடு என்பது ஒரு பக்கம் இருக்க காணி உரிமையும் நிச்சயமாக பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றினைந்து ஒரு அறிக்கையினை தரும் பட்சத்தில் அதனை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடுவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
மலையக இந்திய வம்சாவளி மக்களுக்குமான காணி உரிமையை பெற்றுக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்று.
இதன்போது உரையாற்றியாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணி உரிமை என்பதையும் அதையும் தாண்டி உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றோம்.
அதன் அடிப்படையில் சிவில் சமூகத்தினருடைய பங்களிப்பையும் பெற்றுக்கொள்வதே எமது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
எமது மக்களுக்கு வீடு என்பது ஒரு பக்கம் இருக்க காணி உரிமையும் நிச்சயமாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான ஒரு வரைமுறையை நாம் தயார் செய்ய வேண்டும்.
இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையினை தரும் பட்சத்தில் அதனை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் பிரதமரின் இனைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பிரஜாசத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகாரசபையின் தலைவர் காந்தி சௌந்தர்ராஜன், சிவில் சமூகத்தினர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.





ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan