திருகோணமலை மாவட்டத்தில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல் தொடர்பான திருகோணமலை மாவட்ட கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் ஒழுங்குபடுத்தலிற்கமைய நடைபெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்நாட்டுற்பத்தியை மேம்படுத்துவதற்கான முன்மொழிவு மற்றும் தீர்வுகள் இதன்போது அரசாங்க அதிபரினால் முன்வைக்கப்பட்டது.
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல் தொடர்பான அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களினால் தேசிய ரீதியாகவும், திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இதன்போது உரிய அமைச்சின் செயலாளர்களினால் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்கஅமைச்சர்களான கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணவீர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள, அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri