கிளிநொச்சியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் (Photos)
தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2022ம் ஆண்டு தொடக்கம் 2025ம் ஆண்டு வரையான மூலோபாய திட்டம் தொடர்பிலான கருத்துக்களை கோரும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி தேர்தல்கள் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், தேர்தல்கள் திணைக்கள உத்தியுாகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தேர்தல் திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள் கலந்துகொண்டோரால் முன்வைக்கப்பட்டது.
இதன் போது மாற்றுத்திறனாளிகளிற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு தருதல், முதியவர்களிற்கான வாக்களிப்பு நிலையங்களிற்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, கடமைகளின் நிமித்தம் ஊடக நிறுவனங்களில் பணிபுரிவுாருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.
அதேபோன்று, தூர இடங்களிற்கு பணிகள் மற்றம் தொழில்கள் நிமித்தம் சென்றிருப்போர், கூலி தொழிலிற்காக தூர இடங்களிற்கு சென்றிருப்போரும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் மிக குறைவு என்பதால், அவர்களிற்கான விசேட ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கருத்து முன்வைக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பிலு்ம, ஏனைய விடயங்கள் தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
