யாழில் சிவில் சமூகக் குழுவின் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள்! (Photos)
வடக்கு - கிழக்கு சிவில் சமூகக் குழுவின் ஏற்பாட்டில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் நகரில் நேற்று (18.11.2023) இடம்பெற்றுள்ளது.
தந்தை செல்வா கலையரங்கில் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா, நிலாந்தன், மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
தமிழ்த் தேசியக் கட்சிகள்
இந்த அரசியல் கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மதகுருமார், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கின்ற அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
'இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் செய்ய வேண்டியது?' எனும் தொனிப் பொருளில் குறித்த கருத்தாடல் இடம்பெற்றதுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுபட்ட செயற்பாடு குறித்தும் இந்தக் கருத்தாடலில் வலியுறுத்தப்பட்டது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam