திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(11.02.2026) காலை 11 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் சிவசம்பு ராமகிருஷ்ணன் கலந்து கொண்டதோடு எதிர்வரும் மகா சிவராத்திரி விழாவிற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கடந்த வருடங்களை போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக போக்குவரத்து ஒழுங்குகள், சுகாதாரம், மின்சாரம், நீர் விநியோகம், உணவு, பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் உள்ளடங்கலாக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், திணைக்கள தலைவர்கள், இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள், அரச தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam