யாழில் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்: பதில் கூற அரச அதிபர் மறுப்பு
யாழ். மாவட்ட செயலகத்தில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகளுக்கும், யாழ். மாவட்ட உயர் அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ். மாவட்ட செயலகத்தில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த உயர் அதிகாரிகளுடன் நேற்று (23.01.2023) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்பு
குறிந்த கலந்துரையாடல் முடிவுற்றதும் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடலில் ''காணி விடுவிப்புத் தொடர்பில் ஏதும் பேசப்பட்டதா? ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரி யார்?'' எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததுடன் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரியின் பெயரைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தடுமாறியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க அதிபரின் பதில்களில் மழுப்பல்
பின்னர் மழுப்பல் பேச்சுடன் வனவிலங்கு காணி தொடர்பில் ஆராய்வதற்காக வந்துள்ளனர். ஆராய்ந்தபின் முடிவு எட்டப்படலாம் என அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தைப்பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க யாழில் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற
உத்தரவாதத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        