மாற்றுத் திறனாளிகளை தொழிலில் உட்புகுத்துதல் தொடர்பிலான மாவட்ட மட்ட கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தொழில் செய்ய இயலுமையுடைய மாற்றுத் திறனாளிகளை தொழில் ஒன்றில் இணைத்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (10.06.2026) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மாற்றுத் திறனாளிகளை பிரதேச மட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக பணியாற்றும் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து தொழிலில் இணைக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
மாவட்ட மட்ட கலந்துரையாடல்
சமூக சேவைகள் திணைக்களமும் ,மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இதன் மூலம் மாற்றுத் திறனாளிகளும் மற்றவர்களது உழைப்பில் தங்கி வாழாது திறம்பட பொருளாதார ரீதியாக உழைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இத் திட்டம் பெரிதும் உருதுணையாக அமைகிறது.
கடந்த கால தொழில் நடவடிக்கைகள் தொடர்பிலான செயற்பாடுகள் பற்றியும் இரண்டாம் காலாண்டுக்கான செயற் திட்டம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
அரச சார்பற்ற நிறுவனங்கள்
மாற்றுத் திறனாளிகளை தொழில் ரீதியாக வலுப்படுத்த புதிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் தொழில்வாண்மையான அனுபவ ரீதியாக அரச அங்கீகாரம் பெறுவதற்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த துறை சார் உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பணிப்புரை விடுத்தார்.
மாற்றுத் திறனாளிகளை தொழில் ரீதியாக மேம்படுத்த பிரதேச செயலகங்களில் தொழில் ஆதரவு அலகும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர்,சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்கள மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam