உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வவுனியா ஊடகவியலாளர்களும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் நேற்று(08.04.2025) இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை, பெண் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யும் முறை, பட்டியல் ஆசனம் வழங்கப்படும் முறை மற்றும் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் இதன்போது பதில் வழங்கப்பட்டது.
கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் மற்றும் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.அரவிந்தன், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
