கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டரீதியற்ற மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டரீதியற்ற மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (22-07-2021) மாவட்ட செயலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பாதுகாப்பு படையினர், துறைசார் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில் சட்டவிரோத மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் வீதிகள் சேதமடைதல் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பொலிஸ் காவலரண் மூலம் மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மாவட்டங்களுக்குள் நுழையும் போது பரிசோதிக்கப்பபடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam