யாழ்ப்பாண வணிக கழகத்திற்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
யாழ்ப்பாண வணிக கழகத்திற்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம்,
தேசிய மக்கள் சக்தியின் சார்பாக கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில்
ஹந்தும்நெத்தி, யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் மற்றும் வணிகர்
கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம்,
“பொது வேட்பாளர் தொடர்பில் தாம் ஆதரவளிப்பதாக தற்போது தேர்தலுக்கு முன்னுள்ள காலத்தில் 13 யை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து கட்சிகளுடனும் இது தொடர்பாக கோரிக்கை விடுக்கிறோம்.
தமிழ் சமூகத்தின் ஆதரவு
அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்து 13ஐ தற்போது நடைமுறைப்படுத்தினால் அவருக்கு அனைவரது உடைய ஆதரவினையும் பெற்றுக் கொடுப்போம்.
மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாகவும் அடுத்த தேர்தல் தொடர்பிலும் எம்முடம் கலந்துரையாடினர்.
எனவே நாம் 13-ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தால் எங்களுடைய ஆதரவினையும் ஏனைய தமிழ் சமூகத்தின் ஆதரவினையும் எம்மால் பெற்றுத்தர முடியும் என்று வாக்குறுதி அளித்தோம்.
இதற்கு சுனில் ஹந்தூம்நெத்தி, நாட்டிலே பல்வேறு வகையான பிரச்சனைகள் எழுந்துள்ளன. எனவே அப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் மக்கள் தற்போது புதிய தலைவரை தெரிவு செய்யும் நிலையில் உள்ளார்கள்.
13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் எங்களுடைய தலைவர்களுடன் பேசி அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கி முழுமையாக நடைமுறைப்படுத்துவோம்.
சுபீட்சமான எதிர்காலம்
எனவே நாட்டை சுபீட்சமான எதிர்காலத்திற்கு கொண்டு செல்வதற்கு உங்களுடைய ஆதரவு தேவை என்ற கருத்தினை முன் வைத்தார்.
எனவே வணிக கழகம் என்ற வகையில் நாம் உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம். எனவும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், 13ஆம் திருத்தச் சட்ட முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நாம் முன் வைத்துள்ளோம்” என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த சுனில் ஹந்தும் நெத்தி,
இந்த நாட்டிலுள்ள தேசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய பாதை தேவை. 13 பற்றிய விடயங்கள் எமக்கு தெரிகிறது. மாகாண சபை முறைமை என்பது தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதை கூறிவருகிறோம்.
கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நாம் கூறிவருகின்றோம். நாட்டிலுள்ள அரசியல் யாப்பின் ஒரு சட்ட மூலமே அதனை யாரும் நடைமுறைப்படுத்த தேவையில்லை அதனை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
இம்முறை தேர்தலில் நாமே வெற்றிபெறவுள்ளோம். எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக எதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பது தொடர்பாக திறந்து கலந்துரையாடலை அனைத்து தரப்புடனும் மேற்கொள்ள நாம் முன்வந்துள்ளோம்‘ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |