கிளிநொச்சியில் இடம்பெற்ற அதிகார பகிர்வை வலியுறுத்தும் வகையிலான கலந்துரையாடல்(Video)
வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு 'மீளப் பெற
முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை' வலியுறுத்தும் வகையிலான பொது
அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது
பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (17-06-2023) மாவட்ட கூட்டுறவு சபை கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட 100 நாள் செயல்முனைவின் இறுதியில் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டது.
சமஸ்டி ஆட்சிமுறைமை
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் கிளிநொச்சியில் ஜக்கிய இலங்கைக்குள் சமஸ்டி ஆட்சிமுறைமையை வலியுறுத்தி மக்கள் தமது சுயவுரிமையுடன் வாழவேண்டும் என்பதற்கும் சட்டவிரோத காணி அபகரிப்பு நிறுத்தப்படவேண்டும் உள்ளிட்ட 16 விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் அனைத்து இனமக்களும் ஏற்கக்கூடியவகையில் மக்களின் கருத்துக்கள் விருப்பங்கள் மற்றும் அபிலாசைகள் என்பவற்றை கேட்டறிந்து அவற்றை மக்களின் விருப்பத்திற்கு அமைவாக ஒருங்கிணைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
