வடக்கு மாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடிய சுகாதார அமைச்சர்
யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, வடக்கு மாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடல், வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) தலைமையில் இன்று (17.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு மாகாணத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும், மேம்படுத்தப்பட வேண்டிய சுகாதார விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் பங்குபற்றியோர்
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









