திருகோணமலை மாவட்ட பரீட்சை கடமைகளில் இனரீதியான பாகுபாடு: பரீட்சை ஆணையாளரிடம் முறையீடு

Trincomalee Exam Letter Imranmahroof
By Mubarak Feb 09, 2022 12:16 PM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வழங்கப்பட்ட 5ஆம் தர மற்றும் உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் இனரீதியான பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை மாவட்டத்தில் 5ஆம் தர மற்றும் உயர்தரப் பரீட்சைக் கடமைக்காக இம்முறை வழங்கப்பட்டுள்ள நியமனங்களில் வழமைக்கு மாறாக இனரீதியாகப் புறக்கணிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிபர், ஆசிரியர்கள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பாக எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். எனவே, தயவு செய்து இது விடயங்களில் உடன் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1. இந்த பரீட்சைக் கடமை நியமனங்களில் வழமையாகப் பின்பற்றப்பட்டு வந்த இனச்சமநிலை பின்பற்றப்படவில்லை. முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் இம்முறை பரீட்சைக் கடமைகளில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

2. பரீட்சைக் கடமை வழங்கப்பட்ட கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் புல்மோட்டை, கோமரங்கடவெல போன்ற 80 கிலோ மீற்றருக்கும் அதிக தூரப் பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அயல் பிரதேசமான திருகோணமலை, குச்சவெளி போன்ற பிரதேசத்தவர்களே வழமையாக இப்பகுதி பரீட்சைக் கடமைக்கு நியமிக்கப்பட்டனர். இம்முறை சிரமப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிலை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

3. வழமையாக வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் வழங்கப்படும் பெயர் பட்டியல்களிலிருந்தே பரீட்சைக் கடமை நியமனங்கள் செய்யப்பட்டன. இவ்வாறு செய்வதனூடாக சிரேஸ்டத்துவம், தகைமை என்பன கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும். இம்முறை இந்த நிலை பின்பற்றப்படவில்லை. வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பெயர் பட்டியலுக்கு வெளியே விருப்பு வெறுப்புக்கேற்ப நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

4. அதிபர், ஆசிரியர்களின் சிரேஸ்டத்துவம் கவனத்தில் கொள்ளப்படாமல் முதலாந்தர அதிபர், ஆசிரியர்கள் உதவி மேற்பார்வையாளர்களாக இம்முறை நியமிக்கப்பட்டுள்ளனர். வழங்கப்பட்ட நியமன கடிதங்களில் கூட பெயர், தரம், பாடசாலை என்பன சரியாகக் குறிப்பிடப்படாது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

5. மேற்பார்வை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டோரிடமிருந்து ஒப்பம் பெறப்பட்ட போது பரீட்சை நிலையமோ மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர் கடமைகளோ குறிப்பிடப்படாது ஒப்பங்கள் பெறப்பட்டதாகவும் பின்னர் விருப்பத்திற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

6. பரீட்சைக் கடமை தொடர்பாகத் தெளிவு படுத்தும் கூட்டம் பகல் 12.00 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் மாலை 5.00 வரை அது நடத்தப்பட்டுள்ளது. கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு கூட வழங்கப்படவில்லை. இக்கூட்டத்தில் வைத்தும் நியமனங்களில் விருப்பு வெறுப்புகள் காட்டப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கலந்து கொண்டோர் புகார் தெரிவிக்கின்றனர்.

நேர்மையாக நடக்கவேண்டிய பரீட்சைக் கடமைகளில் இவ்வாறான இனரீதியான புறக்கணிப்புகளும் விருப்பு வெறுப்புகளும் இடம்பெற்றால் பரீட்சைத் திணைக்களத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்பதை தங்களது மேலான கவனத்திற்குத் தயவுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, இது விடயங்களைக் கவனத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதோடு எதிர்காலத்தில் நடுநிலையாகச் செயற்படுவோரைப் பரீட்சை பிராந்திய இணைப்பாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விடச் சொந்த பிரதேசம் தவிர்ந்த அடுத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே பரீட்சைக் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை சண்முகா பாடசாலை பரீட்சைக் கடமைகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு திருகோணமலையைச் சேர்ந்தவர்களையே அங்கு பரீட்சைக் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சந்தேகநிலை ஏற்பட்டுள்ளதாகத் திருகோணமலையிலிருந்து எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தையும் கவனத்தில் கொள்ளுமாறும் அவர் பரீட்சை ஆணையாளரிடம் கேட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US