முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட அல்சைமர் நோயின் மரபணு
அறிவியலின் பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டமாக மனித வாழ்வின் பிற்பகுதியில் ஏற்படும் அல்சைமர்(Alzheimer) நோயின் மரபணு வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக அடையாளம் கண்டுள்ளனர்.
அல்சைமர் நோயானது 65 வயதிற்குப் பிறகு ஏற்படும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் சமீபத்திய அறிக்கையின்படி, இரண்டு விடயங்களை ஒரே நேரத்தில் சிந்திக்க தூண்டுபவர்களுக்கு இது ஆபத்துக் காரணியை தோற்றுவிக்கும் எனவும், உளரீதியான நோய்களுக்கு பிரதான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்சைமர் நோய்
ஸ்பெயினின்(Spain) பார்சிலோனாவில் உள்ள சாண்ட் பாவ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுக்கு தலைமை தாங்கிய வைத்தியர் ஜுவான் ஃபோர்டீயா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அல்சைமர் நோய் என்பது முதுமையின் போது ஏற்படும் மறதியின் பொதுவான வடிவமாகும். இது முதுமையின் நோயாகும், மேலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு பத்தாண்டுகள் கடந்து செல்லும் போது குறித்த நோய் காரணிகள் அதிகரிக்கின்றது.
இந்த நோயானது நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் என்றும் மெதுவாக ஆரம்பித்து, நாட்கள் செல்கையில் மோசமான நிலைமைக்கு நகரும் ஒரு நோய் எனவும் கூறப்படுகிறது.
65 வயதுக்கு மேற்பட்டோரில் 6 சதவீதமானவர்களில் இந்நோய் காணப்படுவதுடன், வயது அதிகரிக்கையில் இந்த நோயால் தாக்கத்திற்குள்ளாபவரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |