2026ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு - மருத்துவத்துறையில் சாதனை படைத்த அமெரிக்க விஞ்ஞானிகள்
2026 ஆம் ஆண்டிற்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த கார்ல் டைசெரோத் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஹெஜ்மேன், ஜார்ஜ் நாகல் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இணைந்து வழங்கப்படவுள்ளதாக சுவீடனின் கரரோலின்ஸ்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(05.10.2026) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒளியினால் இயங்கும் அயன் செனல்கள் மற்றும் ஒப்டோஜெனடிக்ஸ் தொடர்பான முக்கிய கண்டுபிடிப்புகளுக்காகவே இவர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படவுள்ளன.
1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
வாழும் மூளையில் உள்ள தனிப்பட்ட நரம்புச் செல்களின் செயல்பாடுகளை ஒளியின் மூலம் இயங்கச் செய்யவும் அல்லது முடக்கவும் “ஒப்டோஜெனடிக்ஸ்” தொழில்நுட்பம் வழிவகுக்கின்றது.

மூளையின் நுட்பமான செயல்பாடுகளையும் அதன் இரகசியங்களையும் கண்டறிவதற்காக உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில் இந்த முறைமை தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
வெற்றிபெற்ற இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் விருதின் பரிசுக் தொகையான 12 மில்லியன் சுவீடன் குரோனர்கள் (சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
வழமையாக ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகளில் மருத்துவத் துறைக்கான அறிவிப்பே முதன்முதலாக வெளியாவது வழக்கமாகும்.
இதனைத் தொடர்ந்து இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.