பதுளை மருத்துவமனையின் வைத்தியர் மீது தொடரும் ஒழுக்காற்று விசாரணை!
பதுளை மருத்துவமனையின் வைத்தியர் பாலித ராஜபக்ச, தமக்கு எதிராக பொது சேவை ஆணைக்குழு நேற்று (09) நடத்திய ஒழுக்காற்று விசாரணையின் இரண்டாவது நாளில் ஆறு மணி நேர வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் (8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அறிக்கை
2023 ஆம் ஆண்டில் மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டமை குறித்து உரிய விளக்கம் கோரி சுகாதார அமைச்சினால் இந்த ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டது.

தற்போது பொதுச் சேவை ஆணையக்குழுவினால் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் மருத்துவர் அனைத்து பதவி உயர்வுகளையும் வெளிநாட்டு பயணங்களையும் இழந்துள்ளார்.
எல்ல-வெல்லவாய வீதியில் இராவண எல்ல அருகே சுமார் 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தில் காயமடைந்தவர்களை மீட்கப் இவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam