அஸ்வெசும நிவாரண நிதி கொடுப்பனவு! ஹட்டன் நகர் நிலவரம்(Video)
அஸ்வெசும நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஹட்டன் நகரில் உள்ள அரச வங்கிகளில் கூடியிருந்தனர்.
இந்த நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்காக பௌர்ணமி தினமான இன்று (30.08.2023) ஹட்டன் நகரில் உள்ள அரச வங்கிகள் திறக்கப்பட்டன.
எனினும் தேசிய சேமிப்பு வங்கி மாத்திரம் பூட்டப்பட்டிருந்ததனால் அந்த வங்கியில் நிவாரண கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிப்பு
இதேவேளை வங்கிகளில் அஸ்வெசும கொடுப்பனவுககளை பெற்றவர்கள் மகிழ்ச்சியில் சென்றதுடன் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்ததுடன் ஒரு சிலர் வங்கிகளில் காத்திருந்து பணம் கிடைக்காததனால் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,நேற்றைய தினம் அரச வங்கிகள் திறக்கப்பட்டு கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்கள் அதற்கமைய நாங்கள் காலை முதல் காத்திருக்கிறோம் ஆனால் தேசிய சேமிப்பு வங்கி திறக்கப்படவில்லை.
வங்கி திறக்கப்படாது என முன்கூட்டி அறிவித்திருந்தால் நாங்கள் வந்திருக்கமாட்டோம். சிலர் வேலைக்கு செல்லாது தங்களது பெற்றோர்களை அல்லது உறவினர்களை அழைத்து வந்துள்ளனர். இதனால் எத்தனை பேர் இதற்காக அலைந்து திரிய வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.
மக்கள் கோரிக்கை
இன்னுமொருவர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் மிகவும் தூரமிருந்து கஸ்டத்திற்கு மத்தியில் வந்தோம். ஆனால் இங்கு பார்த்த போது காசு வரவில்லை வேறு ஒரு நாளைக்கு வந்து பாருங்கள் என்று தெரிவிக்கிறார்கள். வரும் பணத்தினை பேருந்துக்கே செலவு செய்ய வேண்டி வருமோ தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மலையகத்தில் அஸ்வெசும நிவாரணம் திட்டம் பெரும் பகுதியினருக்கு கிடைத்திருக்க வேண்டிய நிலையில் குறிப்பாக வேலையற்று எவ்வித வருமானமும் இன்றி கஸ்டபடும் குடுபங்களுக்கு கிடைக்கவில்லை.
அதேநேரம் தொழில் புரியும் பலரது குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
எனவே இது குறித்தும் அரசாங்கம் கவனமெடுத்து நியாயமாக கிடைக்க வேண்டியவர்களுக்கு பணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அனைவரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 4 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
