இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் சிக்கல்: நோயால் பாதிக்கப்பட்டுள்ள அபிஷேக் சர்மா
டி20 உலகக் கிண்ணத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான லீக் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா கடுமையான வயிற்றுத் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிக்குப் பிறகு அவர் உட்கொண்ட ஏதோ ஒரு உணவு இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நிலை
உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கினார். ஆனால், ஒரே பந்தில் ஆட்டமிழந்த அவர், உடல் உபாதை காரணமாக மைதானத்தில் சக வீரர்களுடன் கைகுலுக்கக் கூட முடியாத நிலையில் இருந்தார்.

காய்ச்சல் மற்றும் கடும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) காரணமாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும், உடல் எடை கணிசமாகக் குறைந்து மிகவும் பலவீனமாகக் காணப்படுகிறார்.
இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரயான் டென் டோஸ்கேட் கூறுகையில், "அபிஷேக்கிற்கு இன்னும் வயிற்று உபாதைகள் உள்ளன. அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம்.
அவர் திரும்புவது அணியின் புதிய உத்திகளுக்கு (Combinations) உதவும்," எனத் தெரிவித்தார். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான போட்டியைக் கருத்திற்கொண்டு, நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த கோட்டாபய : ராஜபக்சர்கள் ஆட்சி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்