இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் நெகிழ்ச்சிச் செயல்
காலி, ரத்கம கலப்புப் பகுதியில் தேங்கிக் கிடந்த உக்காத கழிவுகளை அகற்றும் பணியில் வெளிநாட்டவர்கள் குழுவொன்று ஈடுபட்டுள்ளது.
நிறுவனம் ஒன்றினால் சுத்திகரிப்புப் பணியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் வெளிநாட்டு பயணிகள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்திருந்த பெருமளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாமாக முன்வந்து இந்தச் சிரமதானப் பணியில் கலந்துகொண்டனர்.
உக்காத கழிவுகள்
கலப்புப் பகுதியில் நீண்டகாலமாக தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் போத்தல்கள், கண்ணாடிப் போத்தல்கள் மற்றும் வெற்று பியர் டின்கள் என பெருமளவிலான உக்காத கழிவுகள் இதன்போது அகற்றப்பட்டன.

ரத்கம கலப்பின் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதும், அழிவடைந்து வரும் தாவரங்களை மீளக் கட்டியெழுப்புவதும் இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உள்ளூர் மக்களுடன் இணைந்த வெளிநாட்டவர்களை பலரும் பாராட்டியுள்ளனர்.