கிளிநொச்சியில் எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம் (Photos)
புதிய இணைப்பு
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன இலக்கங்களின் அடிப்படையில் இன்று மக்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
இந்நிலையில் எரிபொருள் விநியோகத்தை 7 மணியுடன் நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.
எனவே எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் மக்கள் ஏ9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி: யது, எரிமலை
முதலாம் இணைப்பு
கிளிநொச்சியில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு இன்று(21) காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களே எரிபொருள் எடுத்து வரப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் பெறுவதில் தாமதம்
கிளிநொச்சியில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாத்திரமே உள்ள நிலையில் 2 வாரம் எரிபொருள் மக்களிற்கு கிடைக்கப்பெறாமல் இருந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாக கொண்டு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலே மக்கள் இவ்வாறு எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.
வெளியிட்டுள்ள நம்பிக்கை
மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு காத்திருக்கும் மக்களிற்கு இன்று மாலை எரிபொருள் வழங்க கூடியதாக இருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி - கரடியனாறு
கிளிநொச்சியில் எரிபொருள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - கரடியனாறு காக்காக்கடை சந்தி பகுதியிலேயே மக்கள் நீண்ட நாட்களின் பின்னர் இன்று(21) எரிபொருளை பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.
பாதுகாப்பு கடமையில் அதிகாரிகள்
விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், விமானப்படையினரும் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி: எரிமலை





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
