நுணாவில் எரிபொருள் நிலையத்தில் வங்கி ஊழியர்களால் ஏற்பட்டுள்ள குழப்பம்
யாழ். நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையத்தில் தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையைக் குழப்பி அமைதியின்மையினை ஏற்படுத்தியுள்ளனர்.
நுணாவிலில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் அதிகாலை முதல் வரிசையில் சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் காத்திருந்து எரிபொருள் பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து பிற்பகல் 4.30 மணியளவில் வரிசையின் இறுதியில் காத்திருந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையைக் குழப்பி எரிபொருள் பெற்றுச் சென்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் நிலையத்தில் குழப்பம்
ஒழுங்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களும், அரசாங்க ஊழியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையின்றி சென்றதைக் கண்டு, பின் வரிசையில் நின்ற ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர்களும் வரிசையைக் குழப்பி கட்டுப்பாடுகள் ஏதுமின்றி முழுத் தாங்கியை நிரப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.