கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான நேரடி உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நளின் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் நேற்று (14.02.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்நாட்டு விமான சேவை
எங்கள் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் தொடர்பைப் பேணுவது எங்களுக்கு இன்றியமையாததாக இருந்தது. (14) முதல் கொழும்பு இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கான விமான சேவைகள் இரத்மலானையிலிருந்து ஆரம்பிக்கப்படும். இந்த விமானங்கள் டிபி ஏவியேஷன் மூலம் இயக்கப்படுகிறது.
வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் பயணிக்க முடியும் என்பதுடன் இதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ஒரு வழி பயணக்கட்டணம் ரூ. 30,000 ஆக அமைந்திருப்பதுடன் , இரு வழி பயணக்கட்டணம் ரூ. 58,500 ஆக காணப்படும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri