நேரடித் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
நேரடித் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென அரச மருத்துவ அதகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாதும், நேரடியானதுமான தீர்மானங்கள் மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா இந்த விடயத்தை கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பயணக் கடடுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பில் உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றுவது குறித்து திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மெய்நேர தரவுகள் கிடைக்கப் பெறாமையினால் அர்த்தமுள்ள முடக்க நிலைகளை அறிவிக்க முடிவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.