இலங்கை வந்த இராஜதந்திரிகள் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் ஆலயத்தில் விசேட வழிபாடு
திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய நாட்டு இராஜதந்திரிகள் இன்று(10.07.2026) திருகோணமலை - திருக்கோனேஸ்வரா ஆலயத்துக்கு சென்று விசேட வழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.
மலேசியா, இந்தோனேசியா,மியன்மார், தாய்லாந்து,வியட்நாம் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுக் குழுவினரே இவ்வாறு பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது முக்கிய இடமான திருகோணமலை சுற்றுலா துறை தொடர்பான விளக்கங்களை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமார் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்த தூதுக்குழு வினர் சுற்றுலாத்துறை முதலீட்டு வாய்ப்புக்கள் மூலமான பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்துக் கொண்டுள்ளனர்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening