கிழக்கு மாகாண ஆளுநரால் 520 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு(Video)
கல்வியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்துள்ள 520 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(16.06.2023) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் உள்ள இந்து கலாசார மண்டபத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஆசிரியர்களுக்கு நியமனம்
இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சரான சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, விமல வீர திஸாநாயக்க மற்றும் பிரதான செயலாளர் .M.P.S திஸாநாயக்க உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
கல்வியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இன்றையதினம் இடம்பெற்றது.
வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று (16.06.2023) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி-தீபன்























6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
