தினேஷ் ஷாப்டர் படுகொலை:பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று (23.12.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிஹால் தல்துவா, தினேஷ் ஷாப்டரின் கொலை மர்மமான முறையில் இடம்பெற்றுள்ளது. இதனால் சரியான சந்தேகநபரைக் கண்டுபிடிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு சகோதரர்களிடம் விசாரணை
இதேவேளை தினேஷ் ஷாப்டரின் இரண்டு சகோதரர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (22.12.2022) அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 60 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொலைபேசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன.
இதன் மூலம் சந்தேகநபரை கைது செய்ய முடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கொலைப் புலனாய்வுப் பிரிவு நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
