தினேஷ் படுகொலை விவகாரம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறுஞ்செய்தி - துலங்கும் மர்மம்
தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்ட பின், கொலையாளி ஷாப்டரின் கைத்தொலைபேசியிலிருந்து பிரையன் தோமஸின் கைத்தொலைபேசிக்கு செய்தி ஒன்றை கூறும் தகவலொன்று அனுப்பியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியில் ஜுட் waiting for (நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தமக்கு சந்திக்கும் எண்ணம் இல்லை என்று தோமஸ் அக்குறுஞ்செய்திக்கு பதிலளித்திருந்தார் என விசாரணைகளில் தெரியவந்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணகைளில் இருந்து தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது உள்ளிட்ட இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,



