தினேஷ் சாப்டரின் உயிரிழப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
பிரபல தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மரணம் தொடர்பான விசாரணைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளன.
இது கொலையா அல்லது தற்கொலையா எனக் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 175இற்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
