றோயல் சேலஞ்சர்ஸ் அணியில் புதிய பதவியில் தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக், இந்தாண்டு மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து ஐசிசி அதிகாரப்பூர்வ கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் அவருக்கு RCB அணி நிர்வாகம் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.
இதுகுறித்து RCB அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு துடுப்பாட்ட பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் புதிய அவதாரத்தில் திரும்பியுள்ளார்.
எல்லா வகையிலும் எங்கள் விக்கெட் காப்பாளரை வரவேற்கிறோம். கிரிக்கெட்டிலிருந்து வீரனை வெளியேற்றலாம் ஆனால் வீரனிடம் இருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது கிடைத்த இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது, ‘நான் இந்த கடைசி 3 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டதற்கு உங்களது ஆதரவு தான் முழு காரணம். அதற்கு நன்றி. தற்போது நான் RCB அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
எனக்கு எப்போதும் கிடைக்கக்கூடிய உங்களின் ஆதரவு வரும் காலங்களிலும் தேவை. ஆர்சிபி அணி ஐபிஎல் பட்டத்தை வெல்லாதது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பல தடவைகள் சம்பியன் பட்டத்தை நெருங்கி வந்தும் அதனை கைப்பற்ற முடியவில்லை. ஒரு துடுப்பாட்டப் பயிற்சியாளாராக விரைவில் RCB அணி சம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதில் நான் உறுதியளிக்கிறேன்’ என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
