சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தினேஷ் குணவர்தன
சீனாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (14) இரவு கொழும்பிலிருந்து சீனாவுக்குப் பயணமானார்.
சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுவான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7ஆவது சீன - தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி ஆகியவற்றில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
சீனாவின் குன்மிங்கில் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை இந்த எக்ஸ்போ கண்காட்சி நடைபெறவுள்ளது.
எக்ஸ்போ ஏற்பாட்டாளர்களின் கருத்துப்படி, இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சியில் 60 நாடுகள் பங்கேற்கவுள்ளன. அவை அனைத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும், பிராந்திய பொருளாதார பங்குடமை RECP உறுப்பு நாடுகளும் அடங்கும்.
‘பொது அபிவிருத்திக்கான ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, ஜானக வக்கும்புர மற்றும் கனக ஹேரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் பிரதமருடன் சீனா சென்றுள்ளனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்
முதலாம் இணைப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா நோக்கி புறப்பட்டுள்ளார்.
நாளை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிதியாக பங்கேற்கவுள்ள தினேஷ் குணவர்தன
சீன தென் ஆசிய ஏற்றுமதி, இறக்குமதி கண்காட்சியின் விசேட அதிதியாகவும் தினேஷ் குணவர்தன பங்கேற்க உள்ளார்.

இந்த விஜயத்தின் போது சீனாவின் பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan