இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக்குழுவில் இருந்து விலகிய முக்கிய வீரர்
கிரிக்கெட்டில் நாட்டின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தில்ருவான் பெரேரா, தேசிய தெரிவுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், அவர் இலங்கை கிரிக்கெட்டின் இளம் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
டெஸ்ட் விக்கெட்டுகள்
இலங்கைக்காக 43 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 35.9 சராசரியில் 161 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், அவர் தற்போது, இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்கள் அணியுடன் பிரித்தானியவில் இணைந்துள்ளார்.
தில்ருவான் பெரேராவின் விலகலைத் தொடர்ந்து, தேசியத் தெரிவுக்குழுவில் உபுல் தரங்க, அஜந்த மெண்டிஸ், தரங்க பரணவிதான, மற்றும் இந்திக டி செரம் ஆகிய நான்கு உறுப்பினர்கள் உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |