இலங்கை - இந்திய ஒப்பந்தம் குறித்து இந்திய அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

Government Of Sri Lanka Government Of India India
By Sajithra Dec 02, 2024 08:28 PM GMT
Report

இந்தியாவுக்கும் (India) இலங்கைக்கும் இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தமானது, இந்தியாவினால் வற்புறுத்தப்பட்டு இலங்கை மீது திணிக்கப்பட்டது என இலங்கை சட்டக்கல்லூரியின் அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரஷாந்த லால் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

IDM Nations Campus இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Eduit International கல்வி நிலையத்தின் 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் சட்டம் தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாடு (02) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே பிரஷாந்த லால் டி அல்விஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை: கொழும்பு நீதவான் கேள்வி

மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை: கொழும்பு நீதவான் கேள்வி

13ஆவது திருத்தம் 

மேலும், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் பிறிதொரு நாட்டினால் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் பிரஷாந்த லால் டி அல்விஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் குறித்து இந்திய அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு | Indian Sri Lankan Agreement Is Forced By India

சர்வதேச உறவுகளையும், சட்டத்தையும் இணைத்து இலங்கையில் நடாத்தப்படும் முதலாது மாநாடாக இந்த மாநாடு அமைந்திருப்பதாகப் பாராட்டிய அவர், பல்வகை சட்டங்கள் குறித்தும், பிரித்தானியாவிடமிருந்து இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த சட்டங்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து சர்வதேச உறவுகள் என்று வருகிறபோது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தமானது, இந்தியாவினால் வற்புறுத்தப்பட்டு, இலங்கை மீது திணிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், எனவே அதனூடாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தையும் முறையற்ற விதத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் என விமர்சித்துள்ளார். 

அதுமாத்திரமன்றி தான் இந்நாட்டின் சகல மாகாணங்களிலும் பணியாற்றி இருப்பதாகவும், மாகாணசபை முறைமையினால் ஒவ்வொரு மாகாணத்திலும் மாறுபட்ட சட்டவிதிகள் நடைமுறையில் இருப்பதாகவும் குறிப்பிட்ட பிரஷாந்த லால் டி அல்விஸ், இவ்வாறானதொரு கட்டமைப்பு இந்தியா போன்ற பரந்துபட்ட நாட்டுக்குப் பொருத்தமானதாக இருப்பினும், இலங்கைக்குப் பொருந்தக்கூடியதல்ல எனவும், அத்தோடு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் பிறிதொரு நாட்டினால் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் இளைஞர்கள் விவகாரத்தை மறுக்கும் ரஷ்யா

யாழ் இளைஞர்கள் விவகாரத்தை மறுக்கும் ரஷ்யா

ஒன்ராரியோவில் பிரசாரம்

அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை ஓர் சட்டக்கட்டமைப்பென தான் ஒருபோதும் கூறப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், அங்கு அரசியலை மையப்படுத்தியே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் குறித்து இந்திய அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு | Indian Sri Lankan Agreement Is Forced By India

குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட போது மத்திய கிழக்கு நாடுகள் அதனை எதிர்த்து, இலங்கை ஆதரவாக செயற்பட்டதாகவும், இருப்பினும் இலங்கையில் கட்டாய உடற்தகனம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எதிராகத் திரும்பியதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று 'இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனடாவின் ஒன்ராரியோவில் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் தீவிர சாதிய வேற்றுமைகள் நிலவுகின்றன.

அதன் காரணமாக அவர்கள் இரத்ததானம் கூட செய்யமாட்டார்கள். அவ்வேளையில் அவசியமேற்பட்டபோது இராணுவ வீரர்கள் தான் இரத்ததானம் செய்தனர்.

இதுகுறித்தோ அல்லது சிவனொளிபாதமலை சகல மதங்களைச் சேர்ந்தோராலும் அவர்களது புனித தலமாகக் கருதப்படுவது பற்றியோ, இலங்கை குறித்த இன்னபிற நேர்மறை விடயங்கள் பற்றியோ ஏன் எவரும் பேசுவதில்லை?' என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரஷாந்த லால் டி அல்விஸ் கேள்வி எழுப்பினார்.

மேலும், இன்றளவிலே நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாகவும், சகலரும் ஒரு தலைவருக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரிவித்த அவர், எனவே இவ்வேளையில் ஓர் உள்ளகப்பொறிமுறையாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

யாழில் கிராம அலுவலகருடன் முரண்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு..!

யாழில் கிராம அலுவலகருடன் முரண்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு..!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US