மகிந்தவுக்கு சிலை வைக்க வேண்டும்! திலித் ஜயவீர வலியுறுத்தல்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மகிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதம்
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், யுத்தத்தை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்துவதும், அவமானப்படுத்துவதுமே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்கள். ராஜபக்ச குடும்பத்தின் பேராசை குறித்து நான் பல தடவைகள் விமர்சித்துள்ளேன்.
ஆனாலும் மகிந்த ராஜபக்ச என்பவர் சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய, கௌரவிக்கப்பட வேண்டிய ஒரு வீரர்.
கணக்கு விபரங்கள்
அரசாங்கம் உங்களது வீரனை வெளியில் போடப் போகின்றோம் என்று தொடர்ச்சியாக அவரை அவமானப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்வதன் மூலம் எவ்வளவு தொகையை மிச்சப்படுத்த முடியும் என்ற கணக்கு விபரங்களை பகிரங்கப்படுத்த அரசாங்கம் தயாரா? அது தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிடுவார்களா என்றும் திலித் ஜயவீர கேள்வியெழுப்பியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam