டொலர்களை நம்பி ஆட்சிக்கு வரும் கட்சிகள் - மறைமுகமாக அநுர அரசை சாடிய திலித் ஜயவீர
நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும், இளைஞர் யுவதிகளின் முன்னேற்றத்துக்காகவும் உண்மையானதும் நேர்மையானதுமான ஒரு சமூக ஒருமைப்பாடு அவசியமானது என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(21.06.2026) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
டொலர்களை அடிப்படையாகக் கொண்ட கூட்டணி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டொலர்களை அடிப்படையாகக் கொண்ட கூட்டணிகளோ, அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டணிகளோ அல்லது தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்படும் சுயநலக் கூட்டணிகளோ இந்த நாட்டுக்குத் தேவையில்லை.

மாறாக, மக்களின் உண்மையான தேவைகளை உணர்ந்த ஒரு சர்வஜன கூட்டணியே இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகும்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் அரசியல் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைய, இந்நாட்டில் வாழும் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும், எந்தவித காரணத்துக்காகவும் தாங்கள் இந்த நாட்டில் 'சிறுபான்மையினர்' என நினைப்பதற்கோ அல்லது தங்களைத் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகக் கருதுவதற்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நான் இந்த இடத்தில் உறுதியளிக்கின்றேன் என்றார்.
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை - வெளியாகியுள்ள புதிய தகவல்
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri