இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை! வெளியான தகவல்
தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையின் கீழ், இந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களில் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிஜிட்டல் அடையாள அட்டை
இந்த ஆண்டிற்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதிலிருந்து, சுமார் 2 ஆண்டு காலத்திற்குள், நாட்டில் உள்ள 17 மில்லியன் மக்கனையும் பழைய அடையாள அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் முறைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 19 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri