தலவாக்கலையில் பிரதான வீதியினை தோண்டி குழாய்கள் அமைப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தலவாக்கலையில் பிரதான வீதியினை தோண்டி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீதியை அதிகாரிகள் சீர் செய்யாது சென்றுள்ளமையால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(30) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கல்ல- கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா லூஷா வங்கிஓயா, ரதல்ல, நானுஓயா ஆகிய இடங்களுக்கு செல்லும் வீதியில் கல்கந்த தோட்டத்தில் இருந்து தலவாக்கலை. மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு நீர் வழங்கும் அதிகார சபை அதிகாரிகளால் பிரதான வீதியினை தோன்றி குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன.
கோரிக்கை
இருப்பினும் தோண்டப்பட்ட காபெட் பாதையிலே சீர் செய்யாமல் கைவிட்டு சென்றுள்ளனர்.இதனால் பாதை மிகவும் மோசமான நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் பலமுறை இது சம்பந்தமாக கதைத்த போதிலும் அவர்கள் முரண்பாட்டுக்கு வருவதாக தெரிவித்து பாதையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புனரமைத்து தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியவாறு பிரதான வீதியில் பேருந்து வண்டிகளை நிறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் பங்கேற்றனர்.
அத்தோடு, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது பாதையினை முறையாக சீர்த்திருத்தம் செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




