கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பெய்ஜிங்கில் நேற்று(29) செய்தியாளர் சந்திப்பிலேயே தனது இரங்கல் செய்தியை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, "உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அவர்களது குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
இரங்கல்
மேலும் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகமும் ஏற்கனவே தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் சீன நாட்டவர் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தியாவுக்கான சீனத் தூதர் ஸூ ஃபெய்போங் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்ந்தோர் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள்... உள்துறைச் செயலருக்கு 105 தொண்டு நிறுவனங்கள் கடிதம் News Lankasri
