புதையல் வேட்டையாடிய பெண்! கணவரான பிரதி பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தேடுதல்
புதையல் வேட்டை தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கைதுசெய்யப்படும் போது குறித்த பொலிஸ் அதிகாரி எங்கிருந்தார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அனுராதபுரத்தில் தமது மனைவி கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த, பிரதி பொலிஸ் மா அதிபர் வட மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு உயர் அதிகாரியை தொலைபேசியில் அழைத்து அவரை விடுவிக்க அழுத்தம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
புதையல் வேட்டை
இந்த தொலைபேசி கோபுர தகவல்கள் மூலம் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முயற்சிப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தனது மனைவி புதையல் வேட்டைக்கு வரவில்லை என்றும், பூஜைக்காக வந்திருந்தார் என்றும் குறித்த பிரதி பொலிஸ் மா அதிபர் வாதிட்டதாக பொலிஸ்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதுடன் முழு அறிக்கையைப் பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்து முடிவு எடுக்கப்படும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




