டீசல் விலையை ஏன் குறைக்க முடியவில்லை..! அதிகாரிகள் விளக்கம்
காரணங்களை வெளியிட்ட அதிகாரிகள்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் குறைந்துள்ள போதிலும் டீசலின் விலையை குறைக்க முடியாமைக்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட டீசலின் விலைகள் குறையாத காரணத்தினால் டீசல் விலையை குறைக்க முடியவில்லை என பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொடருந்துகள், பேருந்துகள், தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ வாகனங்கள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இவ்வாறு டீசல் பயன்படுத்தப்படுகின்றது.
அதிகரித்துள்ள டீசல் தேவை
இதனால் டீசலுக்கான தேவை வெகுவாக அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், உள்நாட்டில் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டால் எரிபொருட்களின் விலைகளை அரைவாசி அளவில் விற்பனை செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.