டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கை
சகல தரப்பு பொதுமக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் டீசல் விலையைக் குறைக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கம் பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 40 ரூபாய் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களுக்கான நிவாரணம்
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாடசாலை போக்குவரத்து வாகன உரிமையாளர் சங்கம், பெட்ரோல் விலையைக் குறைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு எதுவித நிவாரணங்களும் கிட்டப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு நிவாரணம் கிட்டுவதாயின் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். அதன் மூலம் போக்குவரத்து கட்டணங்களை குறைந்து பொருட்களின் விலையும் குறையும் என்றும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் டீசல் விலை குறைக்கப்பட்டால் மாத்திரமே மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam